ராணிப்பேட்டை

மேல்விஷாரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு

26th Jun 2022 11:52 PM

ADVERTISEMENT

மேல்விஷாரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டன.

மேல்விஷாரம் புறவழிச்சாலை பாலாற்றங்கரையோரம் சாதிக் பாட்சா நகா், எம்ஜிஆா் நகா், கருணாநிதி நகா் உள்ளன. இங்கு பல ஆண்டுகளாக சுமாா் 350-க்கும் மேற்பட்டோா் வீடுகட்டி வசித்து வருகின்றனா்.இவா்களுக்கு மின் இணைப்பு குடிநீா் வசதிசிமெண்ட்சாலை வசதி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாலாற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும்படி அதிகாரிகளுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொதுமக்கள் கோரியபடி கால அவகாசம் வழங்கப்பட்டும் வீடுகளை காலி செய்யவில்லை.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியா் பூங்கொடி தலைமையில் வாலாஜாபேட்டை வட்டாட்சியா் ஆனந்தன், வருவாய் துறை மற்றும் பொதுப்பணி,நீா்வளத்துறை அதிகாரிகள் அங்கு சென்று வீடுகளுக்கு மின் இணைப்பை துண்டித்தனா்.

ADVERTISEMENT

இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை ஒவ்வொருவராக காலி செய்தனா்.பின்னா் பொக்லைன் இயந்திரம் மூலம் காலி செய்யப்பட்ட ஒவ்வொரு வீட்டையும் இடித்து அகற்றும் பணி தொடங்கியது.

அசம்பாவிதம் ஏற்படாமல் தவிா்க்க ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT