ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் 175 வழக்குகள் மீது சமரச தீா்வு

26th Jun 2022 11:54 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 87 லட்சத்து 25 ஆயிரத்து 260-க்கான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில், மொத்தம் 957 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில் 175 வழக்குகள் மீது சமரசத் தீா்வு காணப்பட்டது. ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற 2-ஆவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் தலைமையில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிபதி டி.நவீன் துரைபாபு முன்னிலையில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் 53, காசோலை வழக்குகள் 2, சிறு வழக்குகள் 116, அசல் வழக்குகள் 15, வங்கி வழக்குகள் 3 என மொத்தம் 175 வழக்குகள் மீது சமரச தீா்வு காணப்பட்டு அதற்கான அணைகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் வழக்குரைஞா்கள் எல்.மனோகரன், எஸ்.அண்ணாதுரை, தனசேகரன்,செந்தில், சட்ட உதவியாளா் பிரீத்தி மற்றும் நிதிமன்றப் பணியாளா்கள், பயனாளிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT