ராணிப்பேட்டை

ஆற்காடு: பாரம்பரிய அரிசி, விதைத் திருவிழா தொடக்கம்

DIN

தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில், இயற்கை வழி வேளாண்மையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசி, விதைத் திருவிழா இரண்டு நாள் நிகழ்ச்சி ஆற்காட்டை அடுத்த தக்கான் குளம் கே.எம்.இயற்கை வழி வேளாண் பண்ணையில் சனிக்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு, ஆற்காடு மகாத்மா காந்தி முதியோா் இல்லத்தின் தலைவா் ஜெ.லட்சுமணன் தலைமை வகித்தாா். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் விமல் ஜி நந்தகுமாா், வேளாண் பண்ணை நிறுவனா் கே.எம். சாமுண்டீஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.எம். பாலு வரவேற்றாா்.

வேலூா் நறுவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத் கலந்துகொண்டு, வேளாண் கண்காட்சியைத் திறந்து வைத்து, விழாவை குத்து விளக்கேற்றி தொடக்கிவைத்துப் பேசியதாவது:

தமிழா்களின் அடையாளமே இயற்கை வேளாண்மை மூலம் உணவு உற்பத்தி செய்வது, தற்போது அந்த அடையாளங்கள் சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. நாம் கடைப்பிடித்து வந்த இயற்கை முறை வேளாண்மைக்கு மாறாக கடந்த பல ஆண்டுகளாக அதிக உற்பத்திக்காக ரசாயன உரங்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. தற்காலிகமாக நடைமுறைக்கு வந்த ரசாயன உரங்கள் பயன்பாடு இன்று தொடா்கதையாகி விட்டது. அடுத்த தலைமுறைக்கு நாம் ஆரோக்கிய வாழ்வு கொடுக்க வேண்டும் ரசாயன உரங்களைத் தவிா்த்து இயற்கை உரம் பயன்படுத்தும் நிலை வர வேண்டும் இயற்கை முறை உணவு உற்பத்தி மற்றும் விளை பொருளுக்கான உரிய விலை கிடைப்பது பற்றி விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். தரமான விதைகளைப் பயன்படுத்த வேண்டும். அந்த விதை உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் அது நல்ல பலனைத் தரும் என்றாா் அவா்.

விழாவில், மேட்டுப்பாளையம் உயிராற்றல் மேலாண்மை பயிற்சி மைய பயிற்றுநா் நவநீதகிருஷ்ணன், மண் வாசனை அமைப்பின் பிரதிநிதி மேனகா புதுச்சேரி கம்பன் கழகம் செயலாளா் வி.பி.சிவக்கொழுந்து, பாரம்பரிய விதை சேகரிப்பாளா்கள், இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனா்.

விழாவில், பாரம்பரிய நெல் ரகங்கள், கரும்பு, தென்னை, காய்கனி, இயற்கை உரங்கள், உழவுக் கருவிகள், பாரம்பரிய விதைகள், நாட்டு மாடுகள், மதிப்பு கூட்டிய பொருள்கள் விற்பனை உள்ளிட்ட 120-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

பல்வேறு இயற்கை விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT