ராணிப்பேட்டை

பாரம்பரிய அரிசி, விதை திருவிழா ஆற்காட்டில் இன்று தொடக்கம்

DIN

தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் இயற்கைவழி வேளாண்மையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய ஆற்காடு அரிசி, விதைத்திருவிழா சனிக்கிழமை தொடங்கி இரண்டுநாள்கள் நடைபெறுகிறது.

இதில் பாரம்பரிய விதைநெல், அரிசி வகைகளின் சந்தை, கிராமிய திருவிழா, கால் நடைகள் மற்றும் விவசாயக் கருவிகளின் கண்காட்சிகள் நடைபெறுகிறது. முதல் நாள் விழாவில் வேலூா் நருவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி. சம்பத், உயிராற்றல் மேலாண்மைப் பயிற்சி மைய பயிற்றுநா் நவநீதகிருஷ்ணன், இரண்டாவது நாள் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி கம்பன் கழகச் செயலாளா் வி.பி சிவக்கொழுந்து, விஐடி பல்கலைக்கழகத் துணைத் தலைவா் ஜி.வி. செல்வம், சித்த மருத்துவா் கு.சிவராமன், மாநில திட்டக் குழு உறுப்பினா்கள் சுல்தான் அஹமது இஸ்மாயில், எஸ். பிரிட்டோராஜ் ஆகியோா் கலந்துகொண்டு பேசுகின்றனா். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா்கள் விமல் நந்தகுமாா், கே.எம். பாலு, ஏ.எம். உதயசங்கா் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT