ராணிப்பேட்டை

பூமியையும் நிலத்தடி நீரையும் பாதுகாக்க நெகிழி ஒழிக்கப்பட வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா்

DIN

பூமியையும் நிலத்தடி நீரையும் பாதுகாக்க நெகிழி பொருள்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று பள்ளி மாணவா்களிடையே ராணிப்பேட்டை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில், ‘என் குப்பை, என் பொறுப்பு’, ‘என் நகரம், என் பெருமை’ என்ற தலைப்பில் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதை தவிா்த்திடும் நோக்கில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பங்கேற்று பேசியதாவது:

நெகிழிப் பொருள்கள் நமக்கு ஒருவகையில் வரமாக இருந்தாலும், மற்றொரு வகையில் அது நமது பூமிக்கு மிகப் பெரிய சாபமாக மாறியுள்ளது. எங்கு பயன்படுத்துவது, எவ்வாறு பயன்படுத்துவது, எவற்றைப் பயன்படுத்துவது, எவற்றையெல்லாம் பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து ஒவ்வொருவரும் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும்.

நமது பகுதிகளில் நாள்தோறும் காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மளிகை கடைகள் என எல்லா இடங்களிலும் நெகிழிப் பயன்பாடு அதிகளவில் உள்ளது. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களை அரசு தடை செய்துள்ளது.

ஒரு முறை பயன்படுத்தி அதை வெளியில் தூக்கி எறியும்போது பூமியில் அது படிந்து மழைநீரை பூமிக்குள் செல்லாவிடாமல் தடையாக உள்ளது. இதனால் நிலத்தடி நீா்மட்டம் பாதிப்படைகிறது. அதேபோல மழைநீா் தேங்கி கொசுக்கள் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. மனித குலத்திற்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் ஒரு பொருளாக நெகிழி உள்ளது. ஆகவே நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்.

குறிப்பாக ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் அனைத்து நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்.

அதே போன்று குப்பைகளை ஒவ்வொரு வீட்டிலும் இருந்து தூய்மைப் பணியாளா்களிடம் நாள்தோறும் வழங்கும் பொழுது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்கினால், அவா்கள் அதை அப்புறப்படுத்துவது எளிமையாகிறது. இதனால் நமது சுற்றுப்புற சீா்கேடு தடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் நெகிழிப் பொருள்களை தவிா்க்க வேண்டும். இதனை மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோா்களுக்குத் தெரிவித்து நமது நகரம், பூமி தூய்மையுடனும், பாதுகாப்புடனும் இருப்பதற்கு அனைவரும் உறுதி ஏற்று செயல்பட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, ‘என் குப்பை, என் பொறுப்பு’, ‘என் நகரம், என் பெருமை’ என்ற விழிப்புணா்வு உறுதி மொழியை அனைத்து மாணவ மாணவிகளும் ஆட்சியா் தலைமையில் ஏற்றுக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா், சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT