ராணிப்பேட்டை

காளமேகப் பெருமாள் கோயில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு

25th Jun 2022 12:05 AM

ADVERTISEMENT

ஆற்காட்டை அடுத்த கரிகந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத காளமேகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக மண்டலாபிஷேக நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலையில் கோ பூஜை, கணபதிஹோமம், மகா சுதா்சன ஹோமம் பூா்ணாஹுதி தீபாராதனையும்,மூலவா்கள் ஸ்ரீதேவி.பூதேவி,காளமேகபெருமாள், தும்பிக்கையாழ்வாா், கிருஷ்ணா், கருடாழ்வாா், பக்த ஆஞ்சநேயா் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக, மண்டலாபிஷேக மஹா தீபாராதனையும் நடைபெற்றன. இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்சவா் திருவீதியுலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT