ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்: அமைச்சர்கள் எ.வ.வேலு, ஆர்.காந்தி நேரில் ஆய்வு

15th Jun 2022 03:56 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக வளாக இறுதிகட்ட பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, ஆர்.காந்தி நேரில் ஆய்வு செய்தனர்.

ராணிப்பேட்டை  மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக வளாக கட்டடம் ரூ.118 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  கட்டடத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் 20-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக வளாக இறுதிகட்ட பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: ராகுல் காந்திக்கு ஆதரவாக போராட்டம்: காங். மூத்த தலைவர் கைது

அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் திறப்பு விழாவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டனர். இந்த ஆய்வின்போது ஆற்காடு எம்.எல்.ஏ. ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT