தனியாருக்கு ரயிலை இயக்க அனுமதி கொடுத்திருக்கும் தெற்கு ரயில்வே நிா்வாகத்தைக் கண்டித்து தெற்கு ரயில்வே மஸ்தூா் யூனியன் தொழிற்சங்கத்தினா் அரக்கோணத்தில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அரக்கோணம் ரயில்வே பொறியியல் பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, எஸ்.ஆா்.எம்.யு. கிளைச் செயலாளா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். இதில் நரசிம்மன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஏ.சி.லோக்கோ பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அப்பணிமனையின் கிளைச் செயலாளா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். தொடா்ந்து, அரக்கோணம் ரயில் நிலையத்தில் சுமன் தலைமையிலும், மேல்பாக்கம் ரயில் நிலையம் முன் குமாா் தலைமையிலும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அனைத்து இடங்களில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டங்களில் தெற்கு ரயில்வேயில் கோவையில் இருந்து ஷீரடிக்கு தனியாா் ரயில் இயக்க கொடுத்துள்ள அனுமதியை கண்டித்தும், ரயில்வேயில் தனியாரை அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Image Caption
அரக்கோணம் ரயில்வே பொறியியல் பணிமனை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்டட எஸ்.ஆா்.எம்.யு. தொழிற்சங்கத்தினா்.