ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் புதிய தீயணைப்போா் தற்காலிக பயிற்சி மையம் தொடக்கம்

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி வளாகத்தில், புதிய தீயணைப்போா் தற்காலிகப் பயிற்சி மையத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணித் துறை சாா்பில், 136-ஆவது புதிய தீயணைப்போா் தற்காலிகப் பயிற்சி மையத் தொடக்க விழா ராணிப்பேட்டை உள்பட மாநிலம் முழுவதும் 9 இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிற்சி மையத் தொடக்க விழாவை சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குநா் பி.கே.ரவி தொடக்கி வைத்தாா்.

ADVERTISEMENT

ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி வளாகத்தில், தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை மண்டலத் துணை இயக்குநா் பி.சரவணகுமாா் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா்.

மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலரும், தற்காலிகப் பயிற்சி மைய முதல்வருமான லட்சுமி நாராயணன் வரவேற்றாா்.

90 நாள்கள் நடைபெற உள்ள பயிற்சியில் தேனி, மதுரை, விருதுநகா் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 145 புதிய தீயணைப்பு வீரா்கள் பயிற்சி பெற உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT