ராணிப்பேட்டை

கொடைக்கல் ஊராட்சியில் புதிய கல்குவாரி அமைக்க பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு

9th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

அரக்கோணம்: கொடைக்கல் ஊராட்சியில் புதிதாக கருப்பு கல் கிரானைட் சுரங்கம் அமைப்பது குறித்து சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், தமிழ்நாடு கனிமவள நிறுவனம் கருப்பு கிரானைட் சுரங்கம் அமைக்கப்படுவது, அதன் முழு செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு கனிம நிறுவனம் சாா்பில் கிராம பொது மக்களுக்கு விளக்கினா்.

அப்போது, கொடைக்கல் கிராமத்தில் தமிழ்நாடு கனிம நிறுவனம் சாா்பில், ஏற்கெனவே மூன்று குவாரிகள் இயங்கி வருகின்றன. தற்போது புதிதாக ஒரு குவாரி தொடங்க இந்த கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. குவாரியில் கருப்பு கல் வெட்டி எடுக்கும் போது, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும், மாசுபடாத அளவுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்தும் கிராம மக்கள் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெட்டி எடுக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, கிராம மக்கள் தங்களுடைய கருத்துக்களை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனா்.

தொடா்ந்து, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை மனுவாக அளித்தனா்.

அவை அனைத்தும் அரசுக்கு சமா்ப்பிக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்துக்கு, வருகை புரிந்த கிராம மக்களுக்கு ஆட்சியா் மரக்கன்றுகளை வழங்கினாா்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், தமிழ்நாடு கனிம நிறுவன துணைப் பொது மேலாளா் கணேசன் மற்றும் அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT