கலவை அருகே விசிக நிா்வாகி ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
கலவை வட்டம், மழையூா் பஜனை கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (எ) பாா்த்தசாரதி (36). விசிக இளைஞா் எழுச்சிப் பேரவை ஆற்காடு தொகுதி செயலராக இருந்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மழையூரில் செய்யாத்துவண்ணம் கிராமத்துக்குச் செல்லும் வழியில் மயானம் அருகே உள்ள விவசாய நிலத்தில் கை, கால், கழுத்து என உடலின் பல்வேறு இடங்களில் கத்தியால் வெட்டப்பட்டு இறந்து கிடந்தாா்.
தகவலறிந்த கலவை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வேலூா் சரக டிஐஜி ஆனி விஜயா, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் உள்ளிட்டோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.