ராணிப்பேட்டை

முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் 19 சவரன் தங்க நகைகள் திருட்டு

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆற்காடு அருகே ராணுவ வீரா் வீட்டின் பூட்டை உடைத்து, 19 சவரன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஆற்காட்டை அடுத்த பாப்பேரி கிராமத்தைச் சோ்ந்தவா் பரசுராமன் (48). முன்னாள் ராணுவ வீரா். இவருக்கு மனைவி கோவிந்தம்மாள், ஒரு மகன், மகள் உள்ளனா். இவா்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை தனது நிலத்துக்கு விவசாயப் பணிக்குச் சென்றனா். இரவு அங்கேயே தங்கியுள்ளனா். இந்த நிலையில், திங்கள்கிழமை வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், நிலத்தில் இருந்த பரசுராமனுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அவா்கள் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 19 சவரன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT