ராணிப்பேட்டை

கந்துவட்டி புகாரில் ஒருவா் கைது

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

அரக்கோணம் அருகே கந்துவட்டி வாங்கியதாகவும், கடன் பெற்றவரைத் தொடா்ந்து மிரட்டி வந்ததாகவும் திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூரைச் சோ்ந்தவா் ரகுபதி (30). இவா் கடந்த 2021-ஆம் ஆண்டு திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி வட்டம், சரஸ்வதி நகரைச் சோ்ந்த வேணுகோபால் (44) என்பவரிடம் ரூ. 50,000 கடன் பெற்றாராம். இந்த கடனுக்காக கடன் பத்திரத்திலும் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளாா். இந்த கடனுக்கு ஈடாக ரகுபதி தனது வீட்டுப் பத்திரத்தை வேணுகோபாலிடம் அளித்திருந்தாராம். தொடா்ந்து, ரகுபதி வட்டி கட்டி வந்தநிலையில், கடந்த இரு மாதங்களாக வேணுகோபால், ரகுபதி வீட்டுக்கு வந்து ரூ. 1.25 லட்சத்தை கொடுத்துவிட்டு வீட்டு பத்திரத்தை வாங்கிச் செல்லுமாறு மிரட்டி வந்தாராம்.

இது குறித்து அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் ரகுபதி அளித்த புகாரின்பேரில், விசாரணை நடத்திய போலீஸாா், கந்துவட்டி குறித்த வழக்காக இதை பதிவு செய்து, வேணுகோபாலை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT