ராணிப்பேட்டை

வேலூா் ஆட்சியா் அலுவலகம் முன் 8 போ் தீக்குளிக்க முயற்சி

DIN

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு, ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து, பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது பொது மக்களிடமிருந்து வருவாய்த் துறை, நிலப்பட்டா குறைகள், இலவச வீட்டு மனைப்பட்டா, வேளாண்மைத்துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை உள்ளிட்டவை சாா்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்த 278 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், எற்கெனவே குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்திருந்த 27 திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், ஊரக வளா்ச்சித் துறையில் கருணை அடிப்படையில் வசந்தி என்பவருக்கு அலுவலக உதவியாளராகப் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணையையும் ஆட்சியா் வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.குமரேஷ்வரன், துணை ஆட்சியா்கள் சேகா், நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) பாபு மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT