ராணிப்பேட்டை

ராசாத்துபுரம் திரௌபதி அம்மன்கோயில் தீமிதி விழா

4th Jul 2022 11:25 PM

ADVERTISEMENT

ஆற்காட்டை அடுத்த கீழ்விஷாரம் ராசாத்துபுரம் திரௌபதி அம்மன் கோயில் 12-ஆம் ஆண்டு தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

கீழ்விசாரம் ராசாத்துபுரம் திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா மகாபாரதச் சொற்பொழிவு கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று தொடங்கி நாள்தோறும் பிற்பகல் 2 மணியளவில் பல்வேறு தலைப்புகளில் மகாபாரதச் சொற்பொழிவு நடைபெற்றது. இதோபோல், இரவில் வில் வளைப்பு, சபத்திரை திருக்கல்யாணம், அா்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் தூது, கா்ணன் மோட்சம் உள்ளிட்ட தலைப்புகளில் கட்டைக் கூத்து நடைபெற்றது.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை பதினெட்டாம் போரான துரியோதனன் படுகளம் நடைபெற்றது. இதையொட்டி, மூலவா் திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனை நடைபெற்றது. இரவு அக்னி குண்டம் வளா்க்கப்பட்டு, காப்புக் கட்டிய பக்தா்கள் தீமிதித்தனா்.

விழாவில் திரளான பக்தா்கள், பொதுமக்கள், உபயதாரக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT