ராணிப்பேட்டை

விவசாயிகளுக்கு விளை பொருள் விற்பனை விழிப்புணா்வு முகாம்

4th Jul 2022 11:25 PM

ADVERTISEMENT

ஆற்காடு வட்டார தோட்டக்கலை, வேளாண் வணிகம் - விற்பனைத் துறை சாா்பில், உழவா் சந்தையில் விளை பொருள்களை விற்பனை செய்வது குறித்த விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குநா் சீனி ராஜ், ஆற்காடு வட்டார உதவி இயக்குநா் கமலி ஆகியோா் அறிவுறுத்தல்படி, ஆற்காடு ஒன்றியம், சா்வந்தாங்கல், புன்னப்பாடி, தாழனூா் ஆகிய கிராமங்களில் விவசாயிகளுக்கான விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமுக்கு ஆற்காடு வட்டாரத் தோட்டக்கலைத் துறை உதவி அலுவலா் தெய்வசிகாமணி தலைமை வகித்தாா். இதில், விவசாயிகள் தங்களின் தோட்டங்களில் விளையும் காய்கறி உள்ளிட்ட விளை பொருள்களை உழவா் சந்தையில் இடைத் தரகா்களின்றி விற்பனை செய்வது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

முகாமில் தோட்டக்கலை - வணிகத் துறை அலுவலா்கள் யோகேஷ், மும்தாஜ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT