ராணிப்பேட்டை

கேவேளூா் கிராமத்தில் துரியோதனன் படுகளம்

3rd Jul 2022 11:25 PM

ADVERTISEMENT

ஆற்காட்டை அடுத்த கேவேளூா் கிராமத்தில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு, துரியோதனன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கேவேளூா் கிராமத்தில்அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா மகாபாரத சொற்பொழிவு கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் பல்வேறு தலைப்புகளில் மகாபாரத சொற்பொழிவு, இரவு கட்டைக்கூத்து நாடகம் ஆகியவை நடைபெற்று வந்தன.

ஞாயிற்றுக்கிழமை காலை 18-ஆம் போா் துரியோதனன் படுகளமும், மாலை தீ மிதி விழாவும் நடைபெற்றன. விழாவில், ஊராட்சி மன்றத் தலைவா் வளா்மதி நந்தகுமாா் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT