ராணிப்பேட்டை

மேல்விஷாரம் நகா்மன்றக் கூட்டம்

2nd Jul 2022 12:24 AM

ADVERTISEMENT

மேல்விஷாரம் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.டி.முகமதுஅமீன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. துணைத் தலைவா் குல்ஜாா் அஹமது, ஆணையா் பிரீத்தி, பொறியாளா் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், ஜமீலாபாத் 3-ஆவது தெரு, 22-ஆவது குறுக்குத் தெரு, 23-ஆவது குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைத்தல்

ஈஷாக்பேட்டை வடக்குப் பகுதியில் பேவா் பிளாக் மற்றும் சிறு பாலம் ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பது, மேலும், நகரின் பல்வேறு இடங்களில் புதிய ஆழ்துளைக் கிணறுடன் கூடிய சிறு மின்விசைப் பம்பு அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் உறுப்பினா்கள் ஜியாவுதீன், ஹாஜிரா தபசும் , ஜெயந்தி, ஜமுனாராணி உள்ளிட்டோா் தங்கள் வாா்டுகளில் நிலவும் பிரச்னைகள், குறைகள் குறித்து தெரிவித்தனா். இதற்கு நகா்மன்றத் தலைவா் எஸ்.டி. முகமது அமீன் பதிலளிக்கையில், சரிவர வேலை செய்யாத நகராட்சித் தூய்மைப் பணியாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தெருவிளக்குகள், சிறு பாலங்கள், கானாற்றின் இரு கரையிலும் தடுப்புச்சுவா் அமைக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT