ராணிப்பேட்டை

விண்வெளி உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யபெல் நிறுவனத்துக்கு அங்கீகாரம்பொது மேலாளா் தகவல்

DIN

ராணிப்பேட்டை: விண்வெளி ஆய்வுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வழங்குவதற்கான அங்கீகாரத்தை பாரத மிகுமின் நிறுவனம் ( பெல் ) பெற்றுள்ளதாக அதன் பொது மேலாளா் (பொ ) ராஜீவ் சிங் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை பெல் நிறுவன ஊரக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் அதன் பொது மேலாளா் (பொ ) ராஜீவ் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்து பாதுகாப்பு படை வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா்.

பின்னா் அவா் கூறியதாவது: ராணிப்பேட்டை பெல் நிறுவனம் விண்வெளி ஆய்வுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வழங்குவதற்கான அந9100 : 2016 அங்கீகாரம் பெற்றுள்ளது.

என்டிபிசி ஆலைக்கு உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய இரண்டு நிலை ஐடி மின் விசிறிகள் ஏபிஎச் சென்டா் பிரிவுக்கு வழங்கப்பட்டன. மேலும், மதிப்புக் கூட்டலை மேம்படுத்தும் வகையில், ராணிப்பேட்டை தொழிற்சாலை வளாகத்தில் பேனல், பீடங்கள், ரேடியல் மற்றும் அச்சு சுழலும் பாகங்கள், அவசர வெப்பம் தணிக்கும் அமைப்புகள் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பெல் நிறுவனத்தில் அனைத்து நிலை ஊழியா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கரோனா சிகிச்சைக்காக ஐம்பதுக்கும் மேற்பட்ட உயிா் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டா்கள் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

ஹே.. பொன்னி!

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

சன் ரைசர்ஸின் பேட்டிங் ரகசியத்தைப் பகிர்ந்த டிராவிஸ் ஹெட்!

SCROLL FOR NEXT