ராணிப்பேட்டை

மொழிப்போா் தியாகிகள் நினைவு தினம்: அமைச்சா் மரியாதை

26th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டையில், மொழிப்போா் தியாகிகள் நினைவு தினத்தையொட்டி, மாவட்ட திமுக சாா்பில் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று, தியாகிகளின் உருவப் படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

மாவட்ட அவைத் தலைவா் அ.அசோகன், மாவட்ட துணைச் செயலா் ஏ.கே. சுந்தரமூா்த்தி, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலா் வினோத் காந்தி, வாலாஜா ஒன்றியக்குழுத் தலைவா் சேஷா வெங்கட், நகரப் பொறுப்பாளா் பி.பூங்காவனம், து.தில்லை, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT