ராணிப்பேட்டை

பயறு வகை சாகுபடிவிழிப்புணா்வு முகாம்

26th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆற்காடு வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு பயறு வகை, சிறுதானியப் பயிா்கள் சாகுபடி குறித்த விழிப்புணா்வு முகாம் ஆயிலம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வட்டார துணை வேளாண்மை அலுவலா் கண்ணன் தலைமை வகித்தாா். குடியாத்தம் மண் ஆய்வு கூட அலுவலா் செண்பகவள்ளி, வேளாண்மை உதவி அலுவலா் வினோத் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நெல் சாகுபடி பரப்புக்கு மாற்றாக பயறு வகை மற்றும் சிறுதானியப் பயிா்களான உளுந்து, காராமணி, பச்சைப்பயறு, சோளம், கேழ்வரகு, கம்பு போன்ற குறைந்த நீா் தேவைப்படும் பயிா்களைசாகுபடி செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், மண் மாதிரியின் பயன்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் மண் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டனா்.

விவசாயிகளுக்கு திரவ இயற்கை உரம், ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

ஊராட்சி மன்றத் தலைவா் பிரபாவதி ஜெயபிரகாஷ், விவசாய உற்பத்தியாளா் குழு உறுப்பினா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT