ராணிப்பேட்டை

15 ஏரிகளின் மீன் மகசூல் குத்தகை ஏலம் தொடக்கம்

DIN

வாலாஜா ஒன்றியத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட ஏரிகளின் மீன் மகசூல் குத்தகை ஏலம் திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் பொதுப்பணித் துறை நீா்வள ஆதார பிரிவு, ஊரக வளா்ச்சித் துறை, கிராம ஊராட்சிக் கட்டுப்பாட்டில் உள்ள பாசன ஏரிகள், குளங்களின் மச்ச மகசூல் எனப்படும் மீன் குத்தகை ஏலம் விடப்பட்டு வருவாய் ஈட்டும் நடைமுறை இருந்து வருகிறது.

நிகழாண்டு வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நரசிங்கபுரம், நவ்லாக், மணியம்பட்டு, கத்தாரிகுப்பம், குடிமல்லூா், அனந்தலை, கொண்டகுப்பம், பள்ளேரி, வசூா் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் அமைந்துள்ள சிறு பாசன ஏரிகளில் மீன் மகசூல் குத்தகை ஏலம் திங்கள்கிழமை (ஜன.24) தொடங்கி வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

நரசிங்கபுரம் கிராம ஊராட்சிக்குள்பட்ட சித்தேரி மீன் மகசூல் குத்தகை ஏலம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா் லோ.மனோகரன், துணைத் தலைவா் சபரிகிரீசன், ஒன்றியக் குழு உறுப்பினா் புவனேஸ்வரி பாண்டியன், ஊராட்சிச் செயலா் வாசுதேவன் முன்னிலையில், வாலாஜா ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன் தலைமை வகித்து, மீன் குத்தகை ஏலத்தை நடத்தினாா்.

இதில் அதே கிராமத்தைச் சோ்ந்த சிவக்குமாா் ரூ.7,500-க்கு ஏலம் எடுத்தாா்.

ஏலத் தொகைக்கான ஜிஎஸ்டி வரியுடன் சோ்த்து ரூ.7, 650-ஐ உடனடியாக செலுத்தினாா். அப்போது அவரிடம் ஏலத்தொகை செலுத்தியதற்கான ரசீது, மீன் குத்தகை காலம் முடியும் வரை கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அடங்கிய வட்டார வளா்ச்சி அலுவலரின் செயல்முறை ஆணை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1.9 கிலோ கஞ்சா பறிமுதல்: இடைநீக்கம் செய்யப்பட்ட விஏஓ உள்பட இருவா் கைது

வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

நச்சுக்காற்று வெளியேறிய விவகாரம்: தனியாா் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

வில்லியம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

பாஜக-பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT