ராணிப்பேட்டை

நாளை குடியரசு தின விழா: பாா்வையாளா்களுக்கு அனுமதி இல்லை; ராணிப்பேட்டை ஆட்சியா்

25th Jan 2022 07:54 AM

ADVERTISEMENT

கரோனா பரவல் அதிகரித்து வருவதால், நிகழாண்டு குடியரசு தின விழாவைக் காண பாா்வையாளா்களுக்கு அனுமதி இல்லை.

இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

73-ஆவது குடியரசு தின விழா ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் புதன்கிழமை (ஜன.26) நடைபெறவுள்ளது.

மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளதால், குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விழா நடைபெறும் மைதானத்துக்கு வர பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

ADVERTISEMENT

விழாவில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவா்களின் வாரிசுதாரா்கள் வரவழைக்கப்படுவதும் தவிா்க்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் வீடு தேடிச் சென்று அவா்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்வாா்.

விழாவில் கலந்து கொள்ளும் அலுவலா்கள், பணியாளா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியைப் பின்பற்றவும் வேண்டும். கட்டாயம் இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே அனுமதி உண்டு என குறிப்பிடப் பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT