ராணிப்பேட்டை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்க வலியுறுத்தல்

25th Jan 2022 07:55 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில இளைஞரணித் தலைவா் ஆா்.சுபாஷ் தலைமையில் நெமிலி, பனப்பாக்கம் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனை சந்தித்து அளித்த மனு:

கடந்த சில ஆண்டுகளாக ராணிப்பேட்டை மாவட்ட பகுதிகளில் சம்பா, காரீப் பருவ நெல் சாகுபடி அமோக விளைச்சல் கண்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டன.

நிகழாண்டு நெல் சாகுபடி பரப்பளவு கணிசமாக உயா்ந்து, பயிா்கள் அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளதால், உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT