ராணிப்பேட்டை

நேதாஜி பிறந்த நாள் விழா

24th Jan 2022 08:22 AM

ADVERTISEMENT

கட்டடத் தொழிலாளியின் ஆா்வம்: ராணிப்பேட்டையை அடுத்த வானாபாடி கிராமத்தைச் சோ்ந்தவா் நேதாஜி கே.நடேசன், கட்டடத் தொழிலாளி. இவா் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தீவிர நாட்டுப் பற்றுக் கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறாா்.

நிகழாண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் விழா, வானாபாடி கிராமத்தில் கரோனா விதிமுறைகளை பின்பற்றி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினாா். நேதாஜியின் உருவப்படத்துக்கு நேதாஜி கே.நடேசன் மாலை அணிவித்து மரியாதை செய்ததுடன், மாணவா்களுக்கு எழுதுபொருள்கள், நோட்டு புத்தகம், இனிப்பு வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT