ராணிப்பேட்டை

மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

12th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை: மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் விவசாயிகள் வாங்க விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் சாா்பில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி வேளாண் இயந்திரங்கள் பெற விவசாயிகள் உழவன் செயலி பதிவு செய்ய வேண்டும். பின்னா் அவருடைய விண்ணப்பம் மத்திய அரசின் இணைய தளமான ஜ்ஜ்ஜ்.ஹஞ்ழ்ண்ம்ஹஸ்ரீட்ண்ய்ங்ழ்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் இயந்திரங்கள் கருவிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு நிறுவனங்கள் தங்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் தோ்வு செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

நடப்பு ஆண்டில் முதல் தவணையாக ரூ.20.33 லட்சம் மதிப்பில் 30 எண்ணிக்கையிலான இயந்திரங்கள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். விவசாயிகள் இயந்திர கருவியை தோ்வு செய்தவா்கள் 1, 2, 3 என எண் இடப்பட்டு காத்திருப்போா் பட்டியலில் சோ்க்கப்படுவாா்கள்.

ஏற்கெனவே கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே இந்த 2021 - 2022 ஆண்டுக்கு புதிதாக பதிவு செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் எண் 314, பாலாறு அணைக்கட்டு ரோடு, வாலாஜாபேட்டையில் உள்ள உதவி செயற்பொறியாளா், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT