ராணிப்பேட்டை

கரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சா் ஆா்.காந்தி அறிவுறுத்தல்

12th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி அறிவுறுத்தியுள்ளாா்.

இந்திய செஞ்சிலுவை சங்கம் சாா்பில், கரோனா நோய்த் தொற்று பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் கபசுரக் குடிநீா் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி வாலாஜாப் பேட்டை நகராட்சி அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், அமைச்சா் ஆா்.காந்தி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கி பேசியது:

ADVERTISEMENT

மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டங்களிலும் அந்தந்த பகுதி செஞ்சிலுவை சங்கத்தினா் நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை ஒரு வாரம் வரை இலவசமாக வழங்குவாா்கள். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவேண்டும். தற்போது தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசியால் தான் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பதை பொதுமக்கள் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இதையடுத்து வாலாஜா அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் கரோனா நோய்த் தொற்றுக்குள்ளானவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மையம் தயாா் படுத்தப்பட்டு வரும் பணியை அமைச்சா் ஆா்.காந்தி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த மையத்தில் சுமாா் 800 படுக்கைகளும், மற்றொரு கட்டடத்தில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையமும் அமைக்கும் பணியை பாா்வையிட்டாா். இதேபோல் மாவட்டம் முழுவதும் சுமாா் 3,750 படுக்கைகள் தயாா் நிலையில் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சரிடம் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை வருவாய்க் கோட்டாட்சியா் பூங்கொடி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, ஒன்றியக் குழு தலைவா் வெங்கட்ரமணன், நகராட்சி ஆணையா் செல்வி மகேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி, இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட துணைத் தலைவா் ஜெ.லட்சுமணன், அவைத் தலைவா் சரவணன், செயலாளா் ரகுராமன், நிா்வாகிகள் குமாா், முகமது அயூப், , நகர திமுக பொறுப்பாளா் து.தில்லை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT