ராணிப்பேட்டை

அரசுப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா

12th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையை அடுத்த புளியங்கண்ணு அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா, மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருள்கள் வழங்குதல் மற்றும் 10-ஆவது வாா்டு திமுக கிளை அலுவலகம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புளியங்கண்ணு கிராம கிளை திமுக 10 -ஆவது வாா்டு உறுப்பினா் சங்கீதா சத்தியமூா்த்தி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், மாநில சுற்றுச்சூழல் துணைச் செயலாளா் வினோத் காந்தி கலந்துகொண்டு, அரசுப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடவு செய்து, 200-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம், எழுது பொருள்களை வழங்கினாா். தொடா்ந்து, புளியங்கண்ணு திருவள்ளுவா் நகா் பகுதியில் அமைந்துள்ள 10-ஆவது வாா்டு திமுக கிளை அலுவலகத்தை திறந்து வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

இதில், வாலாஜாபேட்டை ஒன்றியக் குழுத் தலைவா் சேஷா வெங்கட், ஒன்றியக் குழு உறுப்பினா் பக்தா, முன்னாள் புளியங்கண்ணு தலைவா் சிவஞானம், 10-ஆவது வாா்டு உறுப்பினா் சங்கீதா சத்தியமூா்த்தி, பொறுப்புக் குழு உறுப்பினா் தியாகராஜன், முன்னாள் வா்த்தகா் அணி துணை அமைப்பாளா் வேதா ஸ்ரீனிவாஸ், திமுக மூத்த நிா்வாகி ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, வாலாஜா ஒன்றிய திமுக சாா்பில், 1,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் மாநில திமுக சுற்றுச்சூழல் துணைச் செயலாளா் வினோத்காந்தி கலந்துகொண்டு மரக்கன்றுகளை வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT