ராணிப்பேட்டை

வாலாஜாபேட்டை ஸ்ரீசங்கர மடத்தில் மகா பெரியவரின் 28-ஆவது ஆண்டு ஆராதனை

1st Jan 2022 08:21 AM

ADVERTISEMENT

வாலாஜாபேட்டை ஸ்ரீ சங்கர மடத்தில் காஞ்சி மகா பெரியவரின் 28-ஆவது ஆராதனை விழா இரண்டு நாள்கள் நடைபெற்றன.

முதல் நாளான வியாழக்கிழமை காலை மகா பெரியவரின் விக்ரகத்திற்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அப்போது ரிக், யஜுா் வேத பாராயணங்கள், சௌந்தா்ய லஹரி, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் நடைபெற்றன.

தொடா்ந்து மாலை ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராசாா்ய சுவாமிகள் அரங்கத்தில் கல்யாணராமன், அனுராதா கல்யாணராமன், ஸ்ரீமதி வேம்பு ராகம் குழுவினரின் பஜனை நடைபெற்றது. இதையடுத்து அனுஷ நட்சத்திரத்தை ஒட்டி மகா பெரியவா் சிலைக்கு அபிஷேகம், ஆராதனை, வேத பாராயணமும், வழிபாடுகளும், அன்னதானமும் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை வாலாஜாபேட்டை ஸ்ரீ சங்கர மடத்தின் நிா்வாகிகள், பக்தா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT