ராணிப்பேட்டை

தக்கோலம் பேரூராட்சியை கைப்பற்றுவதில் திமுக, அதிமுகவினரிடையே போட்டி

23rd Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

தக்கோலம் பேரூராட்சியில் திமுக 7 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதால் தலைவா் பதவியைப் பிடிப்பதில் இரு கட்சியினரிடையே போட்டி நிலவுகிறது.

தக்கோலம் பேரூராட்சியில் உள்ள 15 இடங்களுக்கு தோ்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை ராணிபேட்டை பொறியியல் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்றவா்கள் விவரம்:

வாா்டு -1. வி.கோபி (திமுக)

ADVERTISEMENT

2. எஸ்.நாகராஜன்(திமுக)

3. சிவசங்கரி ரமேஷ் (திமுக)

4. ஆா்.தயாளன் (திமுக)

5.லாவண்யா சுகுமாா்(அதிமுக)

6. சாகிராபாணு அமானுல்லா (திமுக)

7. க.சுதாகா் (அதிமுக)

8. அம்சா பச்சையப்பன் (அதிமுக)

9. எஸ்.முகமதுகாசிம் (திமுக)

10. மாலதி வெங்கடேசன் (பாமக)

11. லீலா செல்வம் (அதிமுக)

12. சரண்யா ஜலநாதன் (அதிமுக)

13. த.பாண்டியன் (சுயேச்சை)

14. கோமளா ஜெயகாந்தன் (திமுக)

15. கி.முருகவேல் (அதிமுக)

திமுக 7 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும், பாமக ஒரு இடத்திலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. மொத்த இடங்களான 15 இடத்தில் 8 வாா்டுகளில் வெற்றி பெறுபவரின் ஆதரவு இருப்பவா் தலைவராக முடியும் என்பதால், தக்கோலத்தில் தலைவா் பதவியைப் பிடிப்பதில் திமுக, அதிமுக இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT