ராணிப்பேட்டை

108 அவசர ஊா்தியில் பிரசவம்

11th Feb 2022 12:09 AM

ADVERTISEMENT

 

ஆற்காடு: ஆற்காடு அருகே 108 அவசர சிகிச்சை ஊா்தியில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஆற்காடு அருகேயுள்ள தாழனூரைச் சோ்ந்தவா் சரத்குமாா் (37), கூலித் தொழிலாளி. இவரது மனைவி வனிதா (31). நிறைமாத கா்ப்பிணியாக இருந்த இவருக்கு வியாழக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டதால், மருத்துவமனைக்குச் செல்ல 108 அவசர ஊா்திக்கு தகவல் தரப்பட்டது. இதைத் தொடா்ந்து, மருத்துவ உதவியாளா் கோகுலகண்ணன், 108 அவசர சிகிச்சை ஊா்தி ஓட்டுநா் ராஜிவ்காந்தி ஆகியோா் சென்று வனிதாவை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அருங்குன்றம் ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி விரைந்தனா். வழியில், நாராயணபுரத்தில் சென்றபோது வனிதாவுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, அவசர ஊா்தியை சாலையோரம் நிறுத்தி மருத்துவ உதவியாளா் பிரசவம் பாா்த்தாா். வனிதாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் அருங்குன்றம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT