ராணிப்பேட்டை

வண்டிக்கல் கிராமத்தில் எருது விடும் விழா

9th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆற்காடு அருகே வண்டிக்கல் கிராமத்தில் எருதுவிடும் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு வட்டம், புங்கனூா் ஊராட்சி, வண்டிக்கல் கிராமத்தில் மல்லியம்மன்கோயில் திருவிழாவை முன்னிட்டு, காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, எருது விடும் விழா நடந்தது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த காளைகள் விடப்பட்டன. இரவு அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மல்லியம்மன் வீதி உலா மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் நடைபெற்றது.

இதில், கிராம பொதுமக்கள், உபயதாரா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT