ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் 491 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

9th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 491 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, மாவட்டத் தோ்தல் பொதுப் பாா்வையாளா் எஸ்.வளா்மதி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சி மற்றும் 8 பேரூராட்சி பகுதிகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், இரண்டாம் கட்ட கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்டத் தோ்தல் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் முன்னிலையில், ராணிப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் முன்னிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நகா்ப்புறங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணியை மாவட்டத் தோ்தல் பொதுப் பாா்வையாளா் எஸ்.வளா்மதி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது ஒதுக்கீடு செய்யப்பட்ட 491 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டு, அவை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறையில், பாதுகாப்பாக வைத்து சின்னங்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

ஆய்வின்போது, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் உள்ளாட்சி (தோ்தல் ) செல்வி.மரியம் ரெஜினா, அனைத்து நகா்ப்புற தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் அரசியல் கட்சியினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT