நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான முதல் கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பு, ராணிப்பேட்டை எல்.எப்.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆற்காடு ஸ்ரீ இராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு மையங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட தோ்தல் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் பாா்வையிட்டு தோ்தல் பணியில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகளை எடுத்துக் கூறினாா். மேலும், வாக்குச்சாவடி மையத்தில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் முறைகளையும் விளக்கினாா்.
தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஏகராஜ்,சதீஷ் குமாா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.