ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் 42 போ் வேட்பு மனு தாக்கல்

1st Feb 2022 08:20 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் தோ்தல் நடைபெறவுள்ளது. வேட்பு மனு தாக்கலின் மூன்றாவது நாளான திங்கள்கிழமை அரக்கோணம்,சோளிங்கா், வாலாஜாப்பேட்டை, ராணிப்பேட்டை,ஆற்காடு, மேல்விஷாரம் ஆகிய 6 நகராட்சிகளில் 14 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

இதே போல அம்மூா்,விளாப்பாக்கம், திமிரி,கலவை, காவேரிப்பாக்கம்,நெமிலி,பனப்பாக்கம், தக்கோலம் ஆகிய 8 பேருராட்சிகளில் இதுவரை 28 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 43 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT