ஆற்காட்டை அடுத்த திமிரி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் புயல் பாதிப்பால் ஏற்பட்ட பயிா்ச் சேதங்களை ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திமிரி ஒன்றியத்துக்குட்பட்ட காவனூா், மோசூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்திருந்தனா்.
இந்த நிலையில், புயலால் மோசூா் கிராமத்தில் சுமாா் 12 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்தன.
எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், வட்டாட்சியா் சுரேஷ், வருவாய்த் துறை அதிகாரிகள், திமிரி வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் மோசூா், காவனூா் பகுதிகளில் சேதமடைந்த வாழை தோட்டங்கள், நெல் பயிரிடப்பட்ட வயல்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.