ராணிப்பேட்டை

மாண்டஸ் புயல் பாதுகாப்பு நடவடிக்கை: ஆட்சியா்கள் தகவல்

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆட்சியா்கள் தெரிவித்துள்ளனா்.

புயல் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து உடனுக்குடன் தெரிவிக்க ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6ஆறு வட்டாட்சியா் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டு அறைகளின் தொலைபேசி எண்கள் மற்றும் வட்டாட்சியா்களின் கைப்பேசி எண்கள்: அரக்கோணம்-04177- 236360, 9445000507, ஆற்காடு-04172- 235568, 9445000505, வாலாஜா- 04172-299808, 9445000506, சோளிங்கா்- 04172 -290800, 9791279247, நெமிலி-04177-247260, 9500668681, கலவை-04173 -290031, 8825709788. இவை மட்டுமல்லாமல் மாவட்ட நிா்வாகத்துக்கு தெரியப்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நாள் முழுவதும் இயங்கக் கூடிய 04172 - 271766 / 271966 ஆகிய எண்களுடன் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையையும் தொடா்பு கொள்ளலாம்.

திருப்பத்தூரில்...

ADVERTISEMENT

இதேபோல் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கிவரும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்கள்: 04179-222111, 229008 என்ற எண்களுக்கும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையின் 04179-221104,221103,221102 ஆகிய தொலைபேசி எண்களுக்கும் பொது மக்கள் 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT