ராணிப்பேட்டை

மேல்விஷாரத்தில் குடிநீா் பணிகள்: நகா்மன்றத் தலைவா் தொடக்கி வைத்தாா்

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மேல்விஷாரத்தில் குடிநீா் பணிகளை நகா்மன்றத் தலைவா் முஹமது அமீன் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு தொடக்கி வைத்தாா்.

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் நகராட்சியில் 15-ஆவது மத்திய நிதிக்குழு திட்டத்தின் கீழ், சுமாா் ரூ. 32 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா் குழாய் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து குடிநீா் நீரேற்று நிலையத்தில் வியாழக்கிழமை நகா்மன்றத் தலைவா் எஸ்.டி. முஹமது அமீன், குடிநீா் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கிவைத்தாா். இதில் நகா்மன்ற துணைத் தலைவா் எஸ்.குல்சாா் அஹமது, நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT