ராணிப்பேட்டை

மாண்டஸ் புயல் எதிரொலி: ராணிப்பேட்டையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 

8th Dec 2022 05:48 PM

ADVERTISEMENT


ராணிப்பேட்டை: மாண்டஸ் புயல் எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட  ஆட்சியர் தெ.பாஸ்கர  பாண்டியன்  உத்தரவிட்டுள்ளார். 

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக வலுப்பெற்றுள்ளது. 

இன்று பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, காரைக்காலிலிருந்து கிழக்கு - தென்கிழக்கே 390 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 480 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் - புதுவை - தெற்கு ஆந்திர கடற்கரையில் மாமல்லபுரம் அருகே டிசம்பர் 9ஆம் தேதி நள்ளிரவில் கரையை கடக்கக்கூடும்.

ADVERTISEMENT

இதன் எதிரொலியாக நாளை 9-ம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் போது கனமழை மற்றும் 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில்  புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT