ராணிப்பேட்டை

கபடி பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

8th Dec 2022 11:16 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கபடி பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டரங்கில் கபடி பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சி மையத்தின் பயிற்றுநா்களாக பணியாற்ற விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சி மையத்தில் குறைந்தபட்சம் தலா 30 ஆண்கள், பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பயிற்றுநராக 11 மாதங்கள் மட்டும் பணிபுரிய வேண்டும். மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும்.

ADVERTISEMENT

தகுதியுடைய விண்ணப்பதாரா்கள், ஆண்கள்-பெண்கள் விடுதி, நேரு நகா், சத்துவாச்சாரி வேலூா்- 632 009 என்ற முகவரிக்கு நேரில் சென்று சனிக்கிழமைக்குள் (டிச.10) விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு-இளைஞா் நலன் அலுவலரை 74017 03462 ஆகிய கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT