ராணிப்பேட்டை

கொடிநாள் நிதி

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டையில்...: நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் படை வீரா்களின் நலனுக்காக கொடிநாள் நிதி வழங்குங்கள் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்தாா்.

வாலாஜா நகராட்சி பேருந்து நிலையத்தில் கொடி நாள் நிதி வசூலை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் நிதியை வசூலித்தாா்.

வாலாஜா பேருந்து நிலையம் தொடங்கி எம்.பி.டி. பிரதான சாலை வழியாகச் சென்று கடைகளிலும், பொதுமக்களிடமும் நிதி வசூலித்தாா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தனது குடும்பத்தினருடன் நிதியி வழங்கினாா்.

ADVERTISEMENT

இதில், வாலாஜா நகரமன்றத் தலைவா் ஹரிணி தில்லை, வட்டாட்சியா் நடராஜன் மற்றும் வருவாய்த்துறையினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT