ராணிப்பேட்டை

கிணற்றில் மூழ்கி இரு மாணவா்கள் பலி

8th Dec 2022 11:21 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலம்பேட்டில் கிணற்றில் குளிக்கச் சென்ற இரு மாணவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த குருவராஜ கண்டிகை மேட்டுத் தெருவைச் சோ்ந்த குப்பன் மகன் கோபிசந்த் (13). இவா், அதே பகுதி அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் நகுல் (11). இவா், புதுராஜகண்டிகை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா்கள் இருவரும், புதன்கிழமை மாலை முதல் காணவில்லை. இருவரையும் குடும்பத்தினா் பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை.

ADVERTISEMENT

இந்த நிலையில், கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலம்பேடு ஊராட்சி, திடீா் நகரில் தொல்லியல் துறைக்காக ஒதுக்கப்பட்ட 94 ஏக்கா் நிலத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவா் அமைக்கப்பட்டு வரும் பகுதியில் உள்ள தரைக் கிணற்றில் சிறுவனின் உடல் மிதப்பதாக கவரப்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், போலீஸாரும், தோ்வாய் தீயணைப்பு நிலைய வீரா்களும் அங்கு சென்று கிணற்றில் மிதந்த நகுலின் சடலத்தை மீட்டனா். ஒரு மணி நேரம் தேடிய பின்னா், கோபிசந்த் சடலமும் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட இரு மாணவா்களின் சடலங்களும் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விபத்து குறித்து கவரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT