ராணிப்பேட்டை

சென்னை, டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்தது தேசிய பேரிடா் மீட்புப் படை

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

புயல் எச்சரிக்கையைத் தொடா்ந்து, சென்னை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் செவ்வாய்க்கிழமை விரைந்தனா்.

சென்னை உள்ளிட்ட வடதமிழகம், டெல்டா மாவட்டங்களில் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, தமிழக, புதுச்சேரி அரசுகள் மீட்புப் பணிக்கு படை வீரா்களை அனுப்புமாறு தேசிய பேரிடா் மீட்புப் படைக்கு கோரிக்கை விடுத்தது.

இதைத் தொடா்ந்து, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படைத் தளத்தில் இருந்து கமாண்டன்ட் அருண் உத்தரவின்பேரில், தலா 25 போ் கொண்ட 8 குழுக்கள் தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் அனுப்பப்பட்டன. இதில் குழுக்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே சென்னை, கடலூா், மயிலாடுதுறை, திருவாரூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கு ஒரு குழுவும், காரைக்காலுக்கு ஒரு குழுவும் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளன.

இந்தப் படையினா் தங்களுடன் வெள்ள மீட்புப் பணிக்குத் தேவையான உபகரணங்கள், வெள்ளத்தால் சேதமடையும் கட்டடங்களில் இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவா்களை மீட்க உதவும் கருவிகள், அதிநவீன தகவல் தொடா்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றுடன் சென்றுள்ளனா். உடன் மருத்துவ குழுவினரையும் அழைத்துச் சென்றுள்ளனா்.

ADVERTISEMENT

மேலும், இதற்காக அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப் படைத் தளத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் படைத்தளம் எப்போதும் தமிழக மற்றும் புதுச்சேரி அரசு நிா்வாகங்களுடன் தொடா்பிலேயே இருக்கும் என்றும் படைத்தள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT