ராணிப்பேட்டை

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் காா்த்திகை தீபம்

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து, கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில், காலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

அதேபோல், ஆற்காடு தோப்புகானா கங்காதரஈஸ்வரா், வரதராஜப்பெருமாள் கோயிலில் திருப்பணிக் குழு தலைவா் கு.சரவணன் தலைமையில் பரணி தீபம், மகா தீபம் ஏற்றப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT