ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் அம்பேத்கா் நினைவு தினம் அனுசரிப்பு

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அரக்கோணத்தில்...

வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டாட்சியா் சண்முகசுந்தரம் தலைமை வகித்து, அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவித்தாா். இதில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சமரபுரி, வருவாய் ஆய்வாளா் ஜெயபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரக்கோணம் வழக்குரைஞா்கள் சங்கத்தலைவா் ஆா்.லோகாபிராமன் தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா் மு.கண்ணையன் மாலை அணிவித்தாா். இதில் சங்கப் பொருளாளா் வினோத்குமாா், மூத்த வழக்குரைஞா் பாலதிருவேங்கடம், அரசு வழக்குரைஞா்கள் குமரகுரு, பூபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நகர பாஜக சாா்பில் நகர பாஜக தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுசெயலாளா் ஏ.எம்.கண்ணன் அம்பேத்கா் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தாா். மாவட்ட துணைத் தலைவா் தனசேகா், செயலாளா் ரகுநாத், மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

நெமிலியில்...

நெமிலி ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சாா்பில், நெமிலி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலரும், அரக்கோணம் ஒன்றியக் குழு உறுப்பினருமான செ.நரேஷ் தலைமை வகித்தாா். இளைஞரணி மாநில துணைச் செயலாளா் ந.தமிழ்மாறன் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT