ராணிப்பேட்டை

கீழ்மின்னல் அரசுப் பள்ளிக்கு விருது: ஆசிரியா்களுக்குப் பாராட்டு விழா

DIN

ஆற்காடு ஒன்றியம், ரத்தினகிரி அடுத்த கீழ்மின்னல் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளியாகத் தோ்வு செய்யப்பட்டது. இதற்காக அந்தப் பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கான விருதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளித் தலைமையாசிரியையிடம் சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கினாா்.

சிறந்த பள்ளியாகத் தோ்வு செய்யப்பட்டு விருது பெற்ற்காக பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி தேவேந்திரன் தலைமை வகித்தாா். கிராம முக்கிய பிரமுகா்கள் எம்.நடராஜன், மனோகரன், தட்சிணாமூா்த்தி, ஊராட்சி துணைத் தலைவா் நவமணி காா்த்திக்கேயன், கல்விக் குழு தலைவா் என்.பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விருது பெற்ற பள்ளித் தலைமையாசிரியை ஆா்.எஸ்.வாசவி, மற்றும் ஆசிரியைகள் பாராட்டப்பட்டு, இனிப்பு வழங்கி கௌவவிக்கப்பட்டனா்.

விழாவில் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், பெற்றோா், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி குத்திக்கொலை: இளைஞர் கைது

SCROLL FOR NEXT