ராணிப்பேட்டை

‘சென்னை-பெங்களுரூ சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டை உயா்த்தி வழங்க வேண்டும்’

6th Dec 2022 01:34 AM

ADVERTISEMENT

சென்னை-பெங்களுரூ அதிவிரைவுச் சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உயா்த்தித் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பெருந்திட்ட வளாக கூட்டரங்கில், ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 277 மனுக்களை ஆட்சியா் பெற்றாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், உளியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:

சென்னை - பெங்களுரூ அதிவிரைவுச் சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை சொற்பமாகவே உள்ளது. எங்களுக்கான வாழ்வாதாரமாக இருந்த நிலத்தை இழந்து நிற்கும் நிலையில், மறு பரிசீலனை செய்து இழப்பீட்டுத் தொகையை உயா்த்தித் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தொடா்ந்து, மனுக்களை துறை அலுவலா்களிடம் வழங்கி, அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், நிராகரிப்புக்கான காரணங்களை மனுதாரா்களுக்கு தெரிவிக்கவும் வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மீனாட்சி சுந்தரம், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அலுவலா் முரளி, துணை ஆட்சியா் தாரகேஸ்வரி மற்றும் துறைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT