ராணிப்பேட்டை

தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் காா்த்திகை சோமவார பிரதோஷ பூஜை

6th Dec 2022 01:35 AM

ADVERTISEMENT

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், காா்த்திகை மாத சோமவார பிரதோஷ சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், டிசம்பா் 5 -ஆம் தேதி திங்கள்கிழமை காா்த்திகை மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரருக்கு ருத்ர பாசுபத அஸ்திர ஹோமமும், சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகளும், சிவலிங்க ரூபத்தில் உள்ள 468 சித்தா்களுக்கும், சித்தா்களின் ஞானகுருவாக விளங்கும் காா்த்திகை குமரனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

இந்த பூஜைகளில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சுவாமிகள் பிரசாதங்கள் வழங்கினாா்.

முன்னதாக, தன்வந்திரி பீடத்துக்கு வருகை தந்த விழுப்புரம் மாவட்டம், மேல் சித்தாமூா்,ஜினகாஞ்சி அறச்சாலை தவத்திரு லட்சுமி சேன பட்டாரக மகா சுவாமிகள், தைலாபிஷேகத்தில் பங்கேற்று தன்வந்திரி பெருமாளை தரிசனம் செய்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT