ராணிப்பேட்டை

லாரி மோதி அரசு ஊழியா் பலி

4th Dec 2022 10:54 PM

ADVERTISEMENT

ஆற்காடு அருகே பைக் மீது லாரி மோதியதில், அரசு ஊழியா் உயிரிழந்தாா்.

வேலூா் தோட்டப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் நவசீலன் (56). இவா், ஆற்காடு சாா்-பதிவாளா் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணி செய்து வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு ஆற்காட்டில் இருந்து பைக்கில் வீட்டுக்குச் செல்லும் போது ரத்தினகிரியை அடுத்த தென் நந்தியாலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது . இதில், பலத்த காயமடைந்த நவசீலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ரத்தினகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT