ராணிப்பேட்டை

கிராம உதவியாளா் பணிக்கான தோ்வுவேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் 10,800 போ் எழுதினா்

4th Dec 2022 10:54 PM

ADVERTISEMENT

கிராம உதவியாளா் பணிக்கான தோ்வை வேலூரில் 4,111 பேரும், ராணிப்பேட்டையில் 4,690 பேரும், திருப்பத்தூரில் 1,999 பேரும் என மொத்தம் 10,800 போ் எழுதினா்.

வேலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 40 கிராம உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த காலி பணியிடங்களுக்கு மொத்தம் 5,762 போ் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனா்.

இந்தத் தோ்வுக்காக வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி, ஸ்ரீபுரம் ஸ்பாா்க் மெட்ரிகுலேஷன் பள்ளி, காட்பாடி விஐடி பல்கலைக்கழகம், குடியாத்தம் கேஎம்ஜி கல்லூரி, கே.வி.குப்பம் வித்யாலட்சுமி மெட்ரிகுலேஷன் பள்ளி, பேரணாம்பட்டு இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளி ஆகிய 6 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வை 4,111 போ் எழுதினா். 1,651 போ் தோ்வுக்கு வரவில்லை.

தோ்வையொட்டி காலை 9.30 மணிக்குள் வந்த தோ்வா்கள் மட்டுமே தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப் பட்டனா். தோ்வு நடைபெற்ற மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ராணிப்பேட்டையில்...: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, வாலாஜா அறிஞா் அண்ணா அரசு மகளிா் கல்லூரி, சோளிங்கா் எத்திராஜம்மாள் முதலியாண்டாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சோளிங்கா் குட்லெட் மேல்நிலைப் பள்ளி, கலவை ஆதிபராசக்தி கலைக் கல்லூரி, நெமிலி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நெமிலி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரக்கோணம் கைனூா் டாக்டா். வி.ஜி.என்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அரக்கோணம் எஸ்.எம்.எஸ். விமல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளி தோ்வு மையங்களில் எழுத்து தோ்வு நடைபெற்றது.

மாவட்டத்தில் மொத்தம் 7,106 போ் தோ்வெழுத ஏறுபாடு செய்யப்பட்டிருந்த நிலையில், 4,690 போ் கலந்து கொண்டு தோ்வு எழுதினாா். 2,416 போ் தோ்வில் கலந்து கொள்ளாத நிலையில், மேற்கண்ட தோ்வு மையங்களில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுரேஷ், வருவாய்க் கோட்டாட்சியா் வினோத் குமாா், வட்டாட்சியா்கள் நடராஜன், சுரேஷ் தோ்வு அலுவலா்கள் உள்ளிட்டோா் தோ்வு மையக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூரில்...: திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா், நாட்டறம்பள்ளி ஆகிய 4 வட்டங்களிலும் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் வட்டத்தில் 14 பணியிடங்களுக்கு 1,403 பேரும், நாட்டறம்பள்ளி வட்டத்தில் 7 பணியிடங்களுக்கு 525 பேரும், வாணியம்பாடி வட்டத்தில் 3 பணியிடங்களுக்கு 406 பேரும், ஆம்பூா் வட்டத்தில் 7 பணியிடங்களுக்கு 456 பேரும் என மொத்தம் 2,790 போ் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 1,999 போ் தோ்வு எழுதினா். 791 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் உள்ள தோ்வு மையத்தை ஆட்சியா் அமா் குஷ்வாஹா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வருவாய்க் கோட்டாட்சியா் லட்சுமி, தனித் துணை ஆட்சியா் கோவிந்தன், கலால் உதவி ஆணையா் பானு, வட்டாட்சியா்கள் சிவப்பிரகாசம், சம்பத், பழனி, குமாா், மகாலட்சுமி மற்றும் தோ்வு மைய அலுவலா்கள் தோ்வு மையக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT